கர்நாடக ஆர்ய வைஷ்ய மகாமண்டலி சார்பில் பிரதிபா புரஸ்கார் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது
பெங்களூருவில் கர்நாடக ஆர்ய வைஷ்ய மகாமண்டலி சார்பில் பிரதிபா புரஸ்கார் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெங்களூரு :-
பெங்களூரு காந்திநகரில் உள்ள ஞானஜோதி மண்டபத்தில் கர்நாடக ஆர்ய வைஷ்ய மகாமண்டலி சார்பில் 'பிரதிபா புரஸ்கார்-2023' நிகழ்ச்சி நடந்தது.
கர்நாடக ஆர்ய வைஷ்ய மகாமண்டலியின் மாநில தலைவரும், கர்நாடக ஆர்ய வைஷ்ய மேம்பாட்டு கழகத்தின் நிறுவன தலைவருமான டி.ஏ.ஷரவணா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரீஷ், ஐ.பி.எஸ். அதிகாரி சீனிவாசகவுடா, கே.ஏ.எஸ். அதிகாரி தீப்ஸ்ரீ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் எடுத்த 1,000 மாணவ-மாணவிகளை பாராட்டி தலா ரூ.5 ஆயிரம் கல்வி உதவித்தொகைக்கான காசோலையை டி.ஏ.ஷரவணா வழங்கினார்.