பெங்களூருவில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
பெங்களூருவில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு மின்வினியோக நிறுவனம்(பெஸ்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-பெங்களூருவில் மின்கம்பிகள் மாற்றம், மின்மாற்றிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நாளை(புதன்கிழமை) முதல் 13-ந் தேதி வரை பெங்களூருவில் பலபகுதிகளில் மின்தடை ஏற்படும். அதன்படி நாளை ஜக்கசந்திரா, எச்.எஸ்.ஆர். 5-வது லே-அவுட், டீச்சர்ஸ் காலனி, வெங்கடபுரா, கிரீனேஜ் குடியிருப்பு பகுதி, சலார்புரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். மேலும் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை எலெக்ட்ரானிக் சிட்டி 2-வது பகுதி, வீரசந்திரா, அனந்தநகர், தொட்டநாகமங்களா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.