ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் கொள்கை - மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
மருந்து விற்பனையை முறைப்படுத்தும் கொள்கையை 8 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி,
ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த தோல் மருத்துவர் ஜாகீர் அகமது தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது ஆன்லைனில் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் கொள்கையை 8 வாரங்களுக்குள் வகுக்க மத்திய அரசுக்கு கெடு விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இல்லையெனில் மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலாளர் வரும் 2024 மார்ச் 4-ந்தேதி நடைபெறும் விசாரணையின்போது ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.