போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவுகளை போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆய்வு

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவுகளை போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-29 18:45 GMT

பெங்களூரு

பெங்களூருவில் கடந்த 26-ந் தேதி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீஸ்காரருக்கு வழங்கப்பட்ட உணவில் செத்த எலி கிடந்தது.

அந்த போலீஸ்காரர் சுதாரித்து கொண்டு போலீஸ்காரர்களுக்கான வாட்ஸ்-அப் குழுவில் தகவல் தெரிவித்ததால் மற்ற போலீஸ்காரர்கள் அந்த உணவை சாப்பிடாமல் தவிர்த்தனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு உணவு வழங்கிய ஓட்டல் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்பின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார். அந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு, அது தரமானதாக உள்ளதா? எனவும் போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆய்வு நடத்தினார்.

அந்த உணவுகள் தரமானதாக இருந்ததை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அனைத்து போலீசாருக்கும் உணவுகளை வழங்க அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்