நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வற்புறுத்திய போலீசார் மீது வழக்குப்பதிவு

கேரளாவில் தேர்வின் போது நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வற்புறுத்திய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-07-19 05:01 GMT

கொல்லம்,

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - ஆயுஷ் படிப்புகள் போன்றவற்றில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி அவசியம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் நுழைவு தேர்வு,கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது.நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக, முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடையை கழற்றிய பிறகு தேர்வு எழுத அனுமதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொல்லம் மாவட்டம் ஆயூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வின் போது இந்த அவமானகரமான நிகழ்வை சந்தித்ததாக சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 [பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்] மற்றும் 509 [ஒரு பெண்ணின் அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை செய்தல்] ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பெண் அதிகாரிகள் குழு சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த் குற்ற செயலில் ஈடுபட்ட போலீசார் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெர்வித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்