யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-05 05:42 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிக்காகவும், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் உழைக்கிறார். அவர் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் மனமார்ந்த மற்றும் உற்சாகம் நிறைந்த வாழ்த்து எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. உங்கள் வழிகாட்டுதலின் கீழ், உத்தர பிரதேசத்தை தன்னிறைவு பெற்ற வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கனவு நனவாகி வருகிறது" என்று தெரிவித்துள்ளார். இதேபோல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் யோகி ஆதித்யநாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்