10 லட்சம் வாக்குச்சாவடிகளை சேர்ந்த பா.ஜனதாவினரிடையே பிரதமர் மோடி 27-ந்தேதி உரை

நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடிகளை சேர்ந்த பா.ஜனதா ஊழியர்களிடையே பிரதமர் மோடி 27-ந்தேதி காணொலி காட்சி மூலம் பேசுகிறார்.

Update: 2023-06-14 23:48 GMT

கோப்புப்படம்

போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி இம்மாதம் 27-ந்தேதி, மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு செல்கிறார். அங்கு 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பின்னர், வாக்குச்சாவடிகளை சேர்ந்த பா.ஜனதா ஊழியர்களிடையே பிரதமர் மோடி பேசுகிறார்.

10 லட்சம் வாக்குச்சாவடி

இதுகுறித்து மத்தியபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் வி.டி.சர்மா கூறியதாவது:-

நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடிகளை சேர்ந்த பா.ஜனதாவினர் மற்றும் பா.ஜனதா தலைவர்களிடையே பிரதமர் மோடி போபாலில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பா.ஜனதா தலைவர்கள் அதில் பங்கேற்கிறார்கள்.

வாகன பேரணி

அதுபோல், மத்தியபிரதேசத்தில் 64 ஆயிரத்து 100 வாக்குச்சாவடிகளை சேர்ந்த 38 லட்சம் பா.ஜனதாவினர் கலந்துகொள்கிறார்கள்.

பிரதமர் மோடி அனுமதித்தால், போபாலில் வாகன பேரணியும் நடத்தப்படும். அவர் தார் பகுதிக்கும் செல்கிறார் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்