இலங்கை அதிபராக யார் பதவியேற்றாலும் பிரதமர் மோடி உதவ வேண்டும் : சஜித் பிரேமதாசா

இலங்கை அதிபராக யார் பதவியேற்றாலும் பிரதமர் மோடி உதவ வேண்டும் என இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

Update: 2022-07-20 03:02 GMT

கொழும்பு,

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்தில் நடக்கிறது. 19-ந்தேதி வேட்புமனு பெறப்படுகின்றன.

இந்த தேர்தலில் போட்டியிட தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா ,இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவரும், முன்னாள் மந்திரியுமான டல்லஸ் அழகப்பெருமா,. மற்றொரு எதிர்க்கட்சியும், நாட்டின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியுமான ஜெ.வி.பி. தலைவர் அனுர குமார திசநாயகேவும் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து சஜித் பிரேமதாசா விலகுவதாக அறிவித்தார் .மேலும் இலங்கை புதிய அதிபர் இன்று தேர்வு செய்யப்படவுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை அதிபராக யார் பதவியேற்றாலும் பிரதமர் மோடி உதவ வேண்டும் என இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

இலங்கை அதிபராக யார் பதவியேற்றாலும் அவர்களுக்கு இந்திய பிரதமர் மோடியும் ,பிற இந்திய அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும்.அந்த உதவியினால் இலங்கை மக்கள்பேரழிவிலிருந்து காக்கப்படுவார்கள் .என தெரிவித்துள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்