காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்த பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி யானை சவாரி செய்தார்.

Update: 2024-03-09 04:02 GMT

திஸ்பூர்,

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார்.

அங்கு சென்ற பிரதமர் மோடி பூங்காவை சுற்றிப் பார்த்தார். பின்னர் யானை சவாரி செய்தார். காசிரங்காவில் இருந்து அருணாசல பிரதேசம் செல்லும் பிரதமர், இன்று மதியம் மீண்டும் அசாம் மாநிலம் வருகிறார்.

அசாம் மாநிலத்தில் 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்