"காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்து உள்ளது" - பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள ரான் நகரில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி ஒரு விஷப் பாம்பு போன்றவர் என பேசினார்.

Update: 2023-04-29 07:57 GMT

பெங்களூரு

'துஷ்பிரயோக அரசியல்' கலாசாரத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி இன்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலையொட்டி அங்கு தலைவர்கள் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் என்னை 91 முறை அவமானப்படுத்தி உள்ளது. செய்துள்ளது. ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்த செயலுக்காக தண்டிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவரை 'விஷப்பாம்புடன்' ஒப்பிட்டு பேசிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரதமர் மோடி துஷ்பிரயோக அரசியல் கலாச்சாரம் குறித்து குறிப்பிட்டு பேசி உள்ளார்.

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள ரான் நகரில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி ஒரு விஷப் பாம்பு போன்றவர் என பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

"காங்கிரஸ் என்னை மீண்டும் அவமானப்படுத்தி செய்து பேசி வருகிறது. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் என்னை அவமானப்படுத்தும் போது அதற்கு தண்டனை கிடைக்கும். காங்கிரஸ் என்னை 91 முறை அவமானப்படுத்து உள்ளது. துஷ்பிரயோகங்களின் இந்த அகராதியை உருவாக்குவதற்கு பதிலாக மக்களுக்கு நல்லாட்சி வழங்கினால், அவர்களின் நிலை இப்போது உள்ளது போல் பரிதாபமாக இருந்திருக்காது.

நாட்டின் ஜாம்பவான்களைக் கூட காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை, அனைவரையும் துஷ்பிரயோகம் செய்து உள்ளது பாபா சாகிப் அம்பேத்கர் ஜி, சாவர்க்கர் ஜி ஆகியோரை காங்கிரஸ் அவமதித்தது... இப்போது அவர்கள் அதையே என்னிடமும் செய்கிறார்கள்.

அதே வரிசையில் என்னை கருதியதில் நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் என்னைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்வார்கள், நான் தேச சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன். இந்த முறை, கர்நாடக மக்கள் அவர்களுக்கு பாடம் வழங்குவார்கள். பதிலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க அவர்கள் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்" என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்