இதே நாளில் விவேகானந்தர் ஆற்றிய புகழ்பெற்ற சிகாகோ உரையை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி டுவீட்
சிகாகோவில் விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
சென்னை,
அமெரிக்காவில் சிகாகோ நகரில் 1893 ஆம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய புகழ்பெற்ற உரையை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்துள்ளார்.
சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
செப்டம்பர் 11-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் சிறப்பு தொடர்புள்ள தினமாகும். 1893-ஆம் ஆண்டு இதே நாளில்தான் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.