அம்பேத்கர் நினைவு தினம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2023-12-06 04:26 GMT

டெல்லி,

சட்டமேதை அம்பேத்கரின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் அம்பேத்கர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப் தங்கர், எம்.பி.க்கள் உள்பட பலரும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்