கர்நாடகத்தில் ரூ.27,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமர் மோடி இன்று மற்றும் நாளை கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான ரெயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று மற்றும் நாளை கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.டி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இதனை முன்னிட்டு அவர் பெங்களூருவுக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட விஸ்வேஸ்வரய்யா ரெயில் நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பெங்களூரு கண்டோன்மென்ட் யஷ்வந்த்பூர் சந்திப்பு ரெயில் நிலைய மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பார்த்தசாரதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழக புதிய வளாகத்தை பெங்களூருவில் பிரதமர் திறந்து வைக்கிறார். மைசூருவில் உள்ள ஸ்ரீ சுத்தூர் மடத்துக்குச் செல்லும் பிரதமர்,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயிலுக்குச் செல்கிறார்.
இதனை தொடர்ந்து 8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாளை காலை 6.30 மணியளவில், மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.