பிரதமர் மோடி இன்று, தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார்..!
பிரதமர் மோடி இன்று, தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார்.
வாரணாசி,
பிரதமர் மோடி 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் இன்று வாரணாசி வருகிறார். முதலாவதாக, பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில், ருத்ராகாஷ் மாநாட்டு மையத்தில் உலக காசநோய் உச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார்.
இந்த உச்சிமாநாட்டை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஸ்டாப் டிபி பார்ட்னர்ஷிப் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில், காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்குகிறார்.
பின்னர் நண்பகல் 12 மணியளவில் சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் ரூ.1780 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.