காமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

Update: 2022-07-30 18:31 GMT

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில் காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இங்கிலாந்தில் நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு இது முதல் தங்கமாகும்.

இந்ந்நிலையில் காமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மீராபாய் சானுவின் வெற்றி இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்துகிறது..! பர்மிங்காம் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று புதிய காமன்வெல்த் சாதனையை படைத்ததில் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவரது வெற்றி பல இந்தியர்களை, குறிப்பாக வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்