முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-23 16:06 GMT

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதள பதிவில் கூறும்போது,

"ஸ்ரீ பிஷன் சிங் பேடி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து கவலையுற்றேன். விளையாட்டின் மீது அவர் கொண்டிருந்த காதல், அவரது அசாத்திய பந்துவீச்சால் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவர் தொடர்ந்து எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வார். அவரது குடும்பத்தார், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்