சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை கருத்தரங்கை ஐ.நா பொதுச்செயலாளருடன் இணைந்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை உலகளாவிய கருத்தரங்கை பிரதமர் மோடி மற்றும் ஐநா பொதுச்செயலாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-10-20 07:24 GMT

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் கேவாடியாவில் 'மிஷன் லைப்' என்ற சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை குறித்த உலகளாவிய கருத்தரங்கை பிரதமர் மோடி மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கேவாடியாவில் இந்திய ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறுகையில்:-

தனிநபர்களும் சமூகங்களும், நமது பூமியைப் பாதுகாப்பதற்கான தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இது தொடர்பாக, இந்தியா போன்ற நாடுகளுக்கு அர்த்தமுள்ள நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு வளர்ந்த நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை பின்பற்ற வேண்டும். நாம் ஒரு புதுப்பிக்கத்தக்க புரட்சியை கட்டவிழ்த்துவிட வேண்டும் மற்றும் இதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம்.

காலநிலை தாக்கத்தால் இந்தியாவின் பாதிப்பு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகியவற்றால், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் இந்தியா முக்கியமான பாலம் ஆக அங்கம் வகிக்க முடியும்.

உலகளவில் பசுமை இல்லவாயு வெளியேற்றத்தில் ஜி20 நாடுகள் தான் 80 சதவீதம் பங்களிக்கின்றன. அதேசேளையில், உலகளாவிய ஜிடிபி(உள்நாட்டு உற்பத்தி)யில் ஜி20 நாடுகள் தான் 80 சதவீதம் பங்களிக்கின்றன. இயற்கைக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் சக்தி ஜி20 நாடுகளுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்