உலக சுற்றுச்சூழல் தினம்.. மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் மோடி
மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், டெல்லி ஆளுநர் வி.கே. சக்சேனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கேற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பார்க்கில் மரக்கன்று நடும் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்கு ஒரு மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார் மோடி. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், டெல்லி ஆளுநர் வி.கே. சக்சேனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த இயக்கத்தின்கீழ், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரங்கள் நடப்படும்.