"பீகாருக்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் வழங்கினார்" - அமித்ஷா பேச்சு

முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.

Update: 2023-02-25 16:43 GMT

பாட்னா,

பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பாரன் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பீகார் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். நாள்தோறும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான செய்திகளை கேள்விப்படுவதாக தெரிவித்த அவர், முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

மேலும் பீகார் மாநிலத்திற்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியதாக குறிப்பிட்ட அமித்ஷா, மத்திய மந்திரிகளாக இருந்த நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் பீகாருக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார். 


Tags:    

மேலும் செய்திகள்