இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12% குறைவு
இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா எரிசக்தி வாரம் 2023 நிகழ்ச்சியையொட்டி லோகோவை வெளியிட்ட மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது,
பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலையில் கிட்டத்தட்ட 40% பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது, இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளது. எரிவாயு விலையில் கூட கடந்த 24 மாதங்களில், சவுதி விலை கிட்டத்தட்ட 303% அதிகரித்துள்ளது என்றார்.