பெட்ரோல், டீசல் விலை குறையுமா? மத்திய மந்திரி சொன்ன தகவல்

சர்வதேச நிலவரப்படி அடுத்த காலாண்டில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-06-20 18:27 GMT

புதுடெல்லி,

சர்வதேச நிலவரப்படி அடுத்த காலாண்டில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி ஹர்தீப் சிங் பூரி, என்.டி.டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பாய்களை இறக்குமதி செய்த போதிலும், இந்தியாவில் ஒரு வருடமாக எரிபொருள் விலை உயரவில்லை என்றும், எரிவாயு விலையும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிவாயு விலையை குறைக்க முடியுமானால் ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறுகையில், "இது நியாயமான கேள்வி, ஆனால் பதில் சர்வதேச நிலவரத்தைப் பொறுத்தது. பிரதமர் நரேந்திர மோடி நுகர்வோர் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் நன்மை பயக்கும் முடிவை எடுப்பார்"

"பிரதமர் மோடி சரியான நேரத்தில் சில முடிவுகளை எடுத்தார். இது விலைவாசிக்கு உதவியது. நவம்பர் 2021 மற்றும் மே 2022 இல் கலால் வரி குறைக்கப்பட்டது. இதன் விளைவாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 6 மற்றும் ரூ.13 குறைக்கப்பட்டது. என்று அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்