போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுப்படி

போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரிய கேரளாவை சேர்ந்தவரின் மனுவை கர்நாடக ஐக்கோர்டடு தள்ளுப்படி செய்தது .

Update: 2022-11-05 20:39 GMT

பெங்களூரு:- 

சிக்கமகளூருவை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் மங்களூருவில் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவியை சிலர் வலுக்கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியை வைத்து விபசாரம் நடந்த விடுதியில் போலீசார் சோதனை நடத்திய போது 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைதான 7 பேரில் ஒருவர் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்தவர் ஆவார். அவர் மாணவியுடன் உல்லாசமாக இருக்க வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன் மீது பதிவான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி அந்த நபர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்பு நடந்து வந்தது. மனு மீதான இறுதி விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்குப்பதிவு செய்த பின்னர், தான் வாடிக்கையாளர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்