அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்சை அங்கீகரித்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-22 08:36 GMT

புதுடெல்லி,

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கைக்குள் முழுமையாக சென்றுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன், கேசி சுரேன் ஆகியோர் மனு தக்கல் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்