அண்ணாமலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது- பா.ஜனதா அறிக்கை

எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் மக்கள் செல்வாக்குமிக்க அண்ணாமலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது.

Update: 2024-05-14 16:22 GMT

சென்னை,

தமிழக பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம், எதிர் கருத்து கூறுபவர்களை, அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை, முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்களை அதிகாரம் என்ற ஆயுதம் கொண்டு நசுக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் தி.மு.க. அரசை விமர்சித்த பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது.

பியூஷ் மானுஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கவர்னர் மாளிகை அனுமதி கொடுத்து விட்டதாக பொய்யான தகவலையும் பரப்பினர். எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் மக்கள் செல்வாக்குமிக்க அண்ணாமலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்