பாஸ்போர்ட்டு, அரசு பணிகள் உள்ளிட்டவைகளுக்காக 21 நாட்களில் போலீசார் பரிசீலனையை முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு

அரசு பணிகள், பாஸ்போர்ட்டு உள்ளிட்டவைகளுக்காக 21 நாட்களில் போலீசார் தங்களது பரிசீலனையை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-05 21:34 GMT

பெங்களூரு:

அரசு பணிகள், பாஸ்போர்ட்டு உள்ளிட்டவைகளுக்காக 21 நாட்களில் போலீசார் தங்கலது பரிசீலனையை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.

21 நாட்களில் முடிக்க வேண்டும்

அரசு பணிகள், வெளிநாட்டு பயணம், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகளுக்காக போலீஸ் துறையிடம் இருந்து பொதுமக்கள் சான்றிதழ் பெற வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்று சான்றிதழ் பெறுவதற்காக போலீசாரை நாடும் போது, அவர்கள் பொதுமக்கள் கொடுக்கும் ஆவணங்களை பரிசீலனை நடத்தி சான்றிதழ்களை கொடுக்க பல நாட்கள் எடுத்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு பொதுமக்கள், டுவிட்டர், இ-மெயில் மூலமாக ஏராளமான புகார்களை அளித்திருந்தார்கள். அதை்தொடர்ந்து, பாஸ்போர்ட்டு, அரசு பணி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக போலீஸ் துறையை நாடும் பொதுமக்களுக்கு, 21 நாட்களில் பரிசீலனை நடத்தி திரும்ப வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பாஸ்போர்ட்டு, இருப்பிட சான்றிதழ், மத்திய, மாநில அரசுகளின் பணியில் சேருதல், வெளிநாட்டு பயணம், டிரைவா்களுக்கான ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கு தற்போது ஆன்லைன் மூலமாக வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, 7 அல்லது 8 நாட்களில் போலீசார் தங்களது பரிசீலனையை முடித்து கொடுத்து விடுகிறார்கள். சில போலீஸ் நிலையங்களில் மட்டும் பல காரணங்களை சொல்லி பரிசீலனையை முடிக்க போலீசார் காலதாமதம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பொதுமக்களின் சேவையை பரிசீலனை செய்து முடிக்க அதிகபட்சமாக 21 நாட்கள் எடுத்து கொள்ளலாம். அதற்கு மேல் ஏதாவது காரணத்தை சொல்லி காலதாமதம் செய்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கமிஷனர்களிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்