ஓடும் ரெயிலில் கொலை செய்யப்பட்ட பயணி அடையாளம் தெரிந்தது

உப்பள்ளியில் ஓடும் ரெயிலில் கொலை செய்யப்பட்ட ஆந்திராவை சேர்ந்தவர் என்று அயைடாளம் தெரிந்தது.

Update: 2022-11-12 17:29 GMT

உப்பள்ளி:-

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் ஸ்ரீசித்தாரோட சுவாமி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் காலை 4-வது நடைமேடைக்கு ஒரு ரெயில் வந்தது. அப்போது அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் ரத்த வெள்ளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலை கைப்பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், ஓடும் ரெயிலில் கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. அவர் ஆந்திராவை சேர்ந்த ஆஞ்சனேயா (வயது 50) என்றும், உப்பள்ளியில் உள்ள தனது மகளை பார்க்க குண்டகல்லில் இருந்து உப்பள்ளி வந்த ரெயிலில் வந்தும் தெரியவந்தது. அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்