நாடாளுமன்ற கூட்டத்தொடரை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-18 15:58 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நாடாளுமன்றத்தின் அவைகளில் திறந்த மனதுடன் கலந்துரையாட வேண்டும் என்று கூறினார்.

தேவைப்பட்டால் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற வேண்டும் என்ற மோடி, கலந்துரையாடல் செய்வதற்கு சிறந்த இடமாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். உறுப்பினர்களின் விமர்சனமும் விவாதமும் ஆழமாக இருக்க வேண்டும் என்ற பிரதமர் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரை நாட்டின் நலனுக்காக பயன்படுத்துவோம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று வருவதால், நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்