ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எதிரொலி: பெங்களூருவில் முக்கிய சாலைகளில் இன்று வாகனம் நிறுத்த தடை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளதால் பெங்களூருவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய சாலைகளில் வாகனம் நிறுத்த தடை விதித்து போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.;

Update:2023-04-02 00:15 IST

பெங்களூரு:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள். இதனால் மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வாகனம் நிறுத்த தடை

பெங்களூரு சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் இன்று ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் கூட்டம் மைதானத்தை சுற்றிலும் அதிகரித்து காணப்படும். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்கும் நோக்கில் சின்னசாமி மைதானத்தை சுற்றிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி குயின்ஸ் சாலை, எம்.ஜி.ரோடு, கப்பன் சாலை, ராஜ்பவன் சாலை, மியூசியம் சாலை, கஸ்தூரிபாய் சாலை, அம்பேத்கர் வீதி உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கிங்ஸ் சாலை, யூ.பி. சிட்டி வாகன நிறுத்த பகுதி, சிவாஜிநகர் வாகன நிறுத்தம், கன்டீரவா ஸ்டேடியம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்