ராஜஸ்தான்: பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் 33 பேர் காயம்

ஹதுனியா காவல் நிலைய போலீசார், விபத்து நடந்த பகுதிக்கு சென்று பயணிகளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Update: 2023-11-28 01:27 GMT

பிரதாப்கார்,

மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் நகரில் இருந்து ராஜஸ்தானின் பிரதாப்கார் நோக்கி பஸ் ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அதில் 33 பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் ஹதுனியா கிராமம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.

அந்த பகுதியில் இருந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்த ஹதுனியா காவல் நிலைய போலீசார், விபத்து நடந்த பகுதிக்கு சென்று பயணிகளை உடனடியாக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு ரிஷிகேஷ் மீனா, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது என காவல் அதிகாரி ரிஷிகேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்