9 ஆண்டுகள் நிறைவு: பணி மற்றும் நன்றியுணர்வால் நான் நிறைந்திருக்கிறேன் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

எனது முடிவுகள் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் வழிநடத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2023-05-30 07:03 GMT

புதுடெல்லி,

கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமர் ஆனார். 2019-ம் ஆண்டு 2-வது தடவையாக பிரதமர் ஆனார். அந்த ஆண்டு மே 30-ந் தேதி அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். நேற்றுடன் அவரது அரசு தொடர்ச்சியாக 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கடந்த 9 ஆண்டுகளாக, இந்தியாவின் ஏழை மக்களின் கண்ணியத்தை நிலைநாட்டவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நாங்கள் பாடுபட்டுள்ளோம். பல முன் முயற்சிகள் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளோம். எங்கள் நோக்கம் தொடர்கிறது - ஒவ்வொரு குடிமகனையும் உயர்த்துவது மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது.

இந்த நாட்டிற்கான சேவையில் இன்று நாம் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். பணி மற்றும் நன்றியுணர்வால் நான் நிறைந்திருக்கிறேன். எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும், அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் வழிநடத்தப்பட்டுள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்க இன்னும் கடினமாக நாம் உழைப்போம்"

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடியின் 9 ஆண்டுகள் ஆட்சி நிறைவை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இன்றில் இருந்து ஒரு மாதம் நீண்ட பிரச்சாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி நாளை ராஜஸ்தானில் நடைபெற உள்ள பிரச்சார பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்