ஒடிசாவில் 700-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் போலீசில் சரண்

ஒடிசாவில் 700-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போலீசில் இன்று சரண் அடைந்து உள்ளனர்.

Update: 2022-09-17 16:35 GMT


புவனேஸ்வர்,



ஒடிசாவில் பல்வேறு கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தி, பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நக்சலைட்டுகள் மற்றும் அவர்களுக்கு ஆயுத வினியோகம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்த ஆதரவாளர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் போலீசில் இன்று சரண் அடைந்து உள்ளனர்.

700 நக்சலைட்டுகளில் 300 பேர் பஜாகுடா, பைசீகுடா, கால்குடா, பத்ரபுத், ஒண்டிபடார், சம்பல்பூர் மற்றும் சிந்திபுத் கிராமங்களையும், பாதல்புத், குசம்புத், மாதம்புத் மற்றும் ஜோடிகும்மா ஆகிய கிராமங்களையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த கிராமங்கள் அனைத்தும் ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச எல்லை பகுதியில் அமைந்துள்ளன. இவை, நக்சலைட்டுகள் வலிமையுடன் ஆதிக்கம் செலுத்த கூடிய பகுதிகளாகும்.

நக்சலைட்டுகளின் ஆதரவாளர்கள் வன்முறை நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்து வந்துள்ளதுடன், பாதுகாப்பு படையினர் மற்றும் குடிமக்கள் படுகொலையில் தொடர்புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்களை வினியோகித்தும் வந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்