பஞ்சாப்பில் 11,200 விவசாயிகளுக்கு பட்டா : மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பஞ்சாப்பில் 11,200 விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2023-03-09 19:27 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பஞ்சாப்பில் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை 11,200-க்கு மேற்பட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாக அனுபவித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அந்த சொத்தை உரிமையாக்கி தருமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

அதன்படி இந்த நிலத்தை அவர்களுக்கே கொடுக்க முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு சட்டசபையில் மசோதா நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் மூலம் மேற்படி விவசாயிகளுக்கு அவர்கள் அனுபவித்து வரும் சொத்துக்கான பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சொத்துக்கான உரிய இழப்பீடை வழங்கி பட்டா பெற்றுக்கொள்ளலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்