தியேட்டர்களில் வெளி உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கலாம்...குடீநீர் இலவசமாக வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு

ஜம்மு-காஷ்மீரில் தியேட்டர்களுக்கு வருவோர், வெளி உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவதை தடை செய்யக் கூடாது என்று ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.;

Update:2023-01-03 17:55 IST

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மல்டிபிளக்ஸ்கள் மற்றும் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவதை தடை செய்யக் கூடாது என்று ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், படம் பார்க்க வருவோர் வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை தியேட்டர்களுக்குள் கொண்டு செல்வதை தியேட்டர் உரிமையாளர்கள் தடை செய்யலாம்.

இருப்பினும், அனைத்து தியேட்டர்களிலும் பார்வையாளர்களுக்கு சுகாதாரமான, சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். மேலும், கைக்குழந்தை அல்லது குழந்தையை அழைத்து வருவோர் குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவை தியேட்டர்களுக்குள் எடுத்துச் செல்லலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்