'மோடி பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது' - பவன் கல்யாண்

மோடி பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது என பவன் கல்யாண் தெரிவித்தார்.

Update: 2024-06-07 10:12 GMT

புதுடெல்லி,

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்தார். இதன் பின்னர் பேசிய அவர், "பிரதமர் மோடி இந்த நாட்டிற்கு உண்மையான உத்வேகத்தை அளிக்கிறார். அவர் பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது" என்று தெரிவித்தார்.

இதே போல் இந்த கூட்டத்தில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்