தக்காளிக்கு வந்த சோதனை: "ஒரு கிலோ ரூ.4 தான்.." - ஆத்திரத்தில் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயி

தக்காளி விலை கிலோ 4 ரூபாய்க்கு சரிந்ததையடுத்து, விவசாயி ஒருவர் ஆத்திரமடைந்து தக்காளிகளை சாலையில் கொட்டி அழித்தார்.

Update: 2023-09-08 03:30 GMT

திருப்பதி,

கடந்த மாதம் தக்காளி விலை நூறு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்தது. இதனால் பல விவசாயிகள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்கள் என்பதை பார்த்தோம்.

தற்போது தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற மாவட்டத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றபோது ஒரு கிலோ நான்கு ரூபாய்க்கு மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கூலி மற்றும் போக்குவரத்து செலவும் கட்டுப்படியாகவில்லை என அருகில் உள்ள சாலையிலேயே தக்காளிகளை கொட்டி விட்டு சென்றுள்ளார். தக்காளிகள் சாலையில் கொட்டி கிடப்பதை மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்