இந்தியாவில் 36 குழந்தைகளில் ஒரு குழந்தை ஒரு வயதுக்கு முன்பே உயிரிழந்து விடுகிறது; ஆய்வில் தகவல்

இந்தியாவில் 36 குழந்தைகளில் 1 குழந்தை தமது பிறந்த நாளைக்கு முன்பே உயிாிழப்பதாக தரவுகள் தொிவிக்கின்றன.

Update: 2022-06-04 11:18 GMT

புதுடெல்லி,

கடந்த சில ஆண்டுகளாக குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குழந்தை இறப்பு விகிதமானது, கடந்த 1971 ஆம் ஆண்டு ஆயிரம் குழந்தைகளுக்கு 129 குழந்தைகள் உயிாிழந்துள்ளது. 2020- ம் ஆண்டு 28 குழந்தைகள் உயிாிழந்துள்ளது. இது நான்கில் ஒரு பங்காக குறைந்து உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், குழந்தை இறப்பு விகிதமானது சுமார் 36 சதவீதம் குறைந்து உள்ளது. கடந்த 2020 -ம் ஆண்டில், குழந்தை இறப்பு விகிதமானது, அதிகபட்ச மத்தியப் பிரதேசத்தில் (43), குறைந்தபட்சமாக மிசோரத்தில்(3) ஆக பதிவாகியுள்ளது.

ஆனாலும், தரவுகளின் படி 36 குழந்தைகளில் 1 குழந்தை தமது முதல் பிறந்த நாளைக்கு முன்பே உயிாிழப்பதாக தரவுகள் தொிவிக்கின்றன.

குழந்தை பிறப்பு விகிதத்தை பொறுத்தவரையில், கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் குழந்தை பிறப்பு விகிதத்திற்கான வேறுபாடு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த சில காலங்களாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்