மூன்றாவது அணியை உருவாக்கவில்லை: நிதிஷ் குமார் விளக்கம்

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் கடந்த மூன்று தினங்களாக தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.;

Update: 2022-09-07 16:25 GMT

புதுடெல்லி,

பீகாரில் திடீர் திருப்பமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமார், கடந்த 3 தினங்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் இடதுசாரிகள் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்தித்து வருகிறார்.

2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தன்னை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பளராக முன்னிறுத்தவில்லை என்று தெரிவித்து வரும் நிதிஷ் குமார், மூன்றாவது அணியை உருவாக்கவில்லை என்றும் பாஜகவுக்கு எதிராக முக்கிய அணியை உருவாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டை அபகரிக்க பாஜக முயற்சிப்பதாகவும் அனைவரும் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராக போட்டியிட்டால் களம் வேறுமாதிரியாக இருக்கும். அனைத்து தரப்பினருடனும் நாங்கள் பேசி வருகிறோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்