'பே-சி.எம்.' டீசர்ட் அணிந்தவர் மீது போலீசார் தாக்குதல்

‘பே-சி.எம்.’ டீசர்ட் அணிந்தவர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-10-01 22:13 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் அகில இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை தொடங்கினார். நேற்று முன்தினம் 2-வது நாளாக அவர் பாதயாத்திரையை தொடர்ந்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் 'பே-சி.எம்.' என்று அச்சிடப்பட்ட டீசர்ட்டை அணிந்திருந்தார். அதைப்பார்த்த போலீசார் அந்த நபரை அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்த அக்‌ஷய் குமார் என்பது தெரியவந்தது. மேலும் உடனடியாக அந்த டீசர்ட்டை கழற்றும்படி அவரிடம் போலீசார் கூறினர். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இதனால் போலீசார் அவரை தாக்கினர். மேலும் இதுதொடர்பாக அக்‌ஷய்குமார் மீது சாம்ராஜ்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்