கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து பாடல் பாடிய ஆசிரியர்கள்

கன்னட ராஜ்யோத்சவா விழாவையொட்டி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து பாடல் பாடி ஆசிரியர்கள் கொண்டாடினர்.

Update: 2022-10-28 19:00 GMT

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா நெல்லிக்காரு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் நேற்று கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அங்குள்ள பாக்கு தோட்டத்திற்கு மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு பஞ்சாயத்து தலைவி சுசீலா, பள்ளி தலைமை ஆசிரியை மார்க்ரெட், ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் ஒருசேர 'என் நாடு, என் பாட்டு' என்ற கன்னட பாடலை பாடினர். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்களும், ஆசிரியைகளும் சேர்ந்து இனிப்புகள் வழங்கினர்.

மேலும் செய்திகள்