ஜார்கண்டில் சூனியம் செய்வதாக வயதான தம்பதி அடித்துக் கொலை..!
ஜார்கண்டில் சூனியம் செய்வதாக வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.;
லடேகர்,
ஜார்கண்ட் மாநிலம் லடேகர் மாவட்டம் ஹெஸ்லா கிராமத்தில் வசித்தவர்கள் சிபல் கஞ்சு (வயது 70)- பவ்னி தேவி(65). நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சிலர், இந்த தம்பதியரை வீட்டைவிட்டு தரதரவென இழுத்து வந்ததுடன், லத்தியால் தாக்கியும், அடித்து உதைத்தும் உள்ளனர்.
இதில் அந்த வயதான தம்பதியர் இறந்தனர். பின்னர் அவர்களது உடலை, அவர்களின் வீட்டிற்குள் வீசியதுடன், அங்கிருந்த மருமகள் மற்றும் குழந்தைகளையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் வயதான தம்பதியர் வீட்டில் சூனியம் வைக்கும் மாந்திரீக பூஜை செய்ததாக குற்றம் சாட்டி இந்த தாக்குதல் சம்பவமும், கொலையும் நடந்தது தெரியவந்தது.இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.