பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு - ஒடிசா அரசு அறிவிப்பு
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.;
புவனேஷ்வர்,
ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அம்மாநில துணை முதல்-மந்திரி பிராவதி பரிடா கலந்து கொண்டார். அப்போது, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறினார்.
மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும், மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும், பெண்களின் உடல் ஆரோக்ய நலனில் இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும்தான் மாதவிடாய் விடுமுறை அமலில் இருக்கிறது. தற்போது ஒடிசாவும் அதில் இணைந்துள்ளது.