கேரளாவில் தனது தடகள பள்ளியில் ஆக்கிரமிப்பு; இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா

கேரளாவில் தனது தடகள பள்ளியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா செய்தியாளர்கள் முன் அழுதபடி கூறினார்.;

Update:2023-02-05 10:03 IST


புதுடெல்லி,


இந்தியாவின் தங்க மங்கை என போற்றப்படும் கேரளாவை சேர்ந்த பி.டி. உஷா இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, கேரளாவில் உள்ள தனது உஷா தடகள பள்ளியின் வளாக பகுதிக்குள் அனுமதியின்றி சட்டவிரோத கட்டிடங்கள் எழுப்பப்பட்டன என கண்ணீர் மல்க கூறினார்.

இதனை எதிர்த்து நிர்வாகம் கேட்டபோது, அவர்களிடம் தவறாக நடந்து கொண்டனர். பஞ்சாயத்தின் அனுமதியை நாங்கள் பெற்று விட்டோம் என அவர்கள் கூறினர்.

இதுபற்றி உஷா போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து, கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டன என அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக ஆன பின்னர், துன்புறுத்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய விசயங்கள் அதிகரித்தன என்றும் பி.டி. உஷா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்