அரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு நோட்டீஸ்

அரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2022-10-23 15:34 GMT

காஷ்மீர்,

ம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் உயர் பாதுகாப்பு மிகுந்த குப்கர் சாலைப் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த பங்களாவை காலி செய்யுமாறு முஃப்திக்கு காஷ்மீர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மெகபூபா முப்தி கூறியதாவது:

இது எதிர்பார்த்த நடவடிக்கை தான். நான் தங்கியிருக்கும் அரசு பங்களா, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரிருக்கானது என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பங்களா கடந்த 2005, டிசம்பரில் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு எனது தந்தைக்கு (முஃப்தி முகமது சயீது) ஒதுக்கப்பட்டதாகும்.

எனவே, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் சரியானது அல்ல. இந்த நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக எனது சட்டக் குழுவுடன் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்