பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை - காங்கிரஸ் தலைவர் உதித்ராஜ்
10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை, ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உயர்சாதி மனோபாவத்தை எதிர்க்கிறேன். என காங்கிரஸ் தலைவர் உதித்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் உதித்ராஜ் கூறிகையில்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை, ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உயர்சாதி மனோபாவத்தை எதிர்க்கிறேன். பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் போது, இந்திரா சஹானி வழக்கை சுட்டிக்காட்டி, 50 சதவீதத்துக்கு மேல் மொத்த இடஒதுக்கீடு அளவு போகக்கூடாது என சுப்ரீம் கோர்ட் மேற்கோள் காட்டியது.
ஆனால் 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கின்போது 50 சதவீதம் என்ற உச்சவரம்பு மாற்ற முடியாதது அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.