அமுல் பால் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

அமுல் பால் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-09 06:45 GMT

பெங்களூரு-

கர்நாடகத்தில் நந்தினி பால் நிறுவனத்துடன் குஜராத்தின் அமுல் பால் நிறுவனத்தை இணைக்க பா.ஜனதா அரசு திட்டமிடுவதாகவும், கர்நாடகத்தில் ஆன்லைன் மூலமாக அமுல் பால் விற்பனைக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் கன்னட அமைப்புகள், எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து டெல்லியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நந்தினி பாலுக்கு என்று தனிச்சிறப்பு இருக்கிறது. தரமான நிறுவனம் என்ற பெயர் நந்தினிக்கு உள்ளது. நந்தினி பால் மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில மாநிலங்களில் நந்தினி பால் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அமுல் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது சரியல்ல. மார்க்கெட்டில் நந்தினியை முன்னிலைப்படுத்தவும், அமுலை பின்னுக்கு தள்ளவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்