மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பதில்

மத்திய அரசுப்பணிகள் (விடுமுறை) விதிகள்-1972-ல் மாதவிலக்கு விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை என ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-25 06:24 IST

Image Courtesy : ANI

புதுடெல்லி,

மதுரைத் தொகுதி மக்களவை எம்.பி. வெங்கடேசன், மத்திய அரசில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்தப் பதில் வருமாறு:-

மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் மத்திய அரசுப்பணிகள் (விடுமுறை) விதிகள்-1972-ல் மாதவிலக்கு விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. இந்த விதிகளில் அத்தகைய விடுமுறையை சேர்க்க தற்போது எந்த முன்மொழிவும் இல்லை. ஏற்கனவே மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, கூடுதல் சாதாரண விடுப்பு, குழந்தைப்பராமரிப்பு விடுப்பு, மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவச்சான்றிதழ் விடுப்பு மற்றும் நிலுவையில்லா விடுப்பு என பல விடுமுறைகள் கிடைக்கின்றன.

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்