எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ் குமார் டெல்லியில் முகாம்

எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ் குமார் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

Update: 2023-08-16 23:00 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பா.ஜனதாவுக்கு எதிராக உருவாகி உள்ள எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு அடித்தளமிட்டவர்களில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் முக்கியமானவர். இவரது தீவிர முயற்சியால் இந்த கூட்டணியில் 26 கட்சிகள் இணைந்து உள்ளன.

இந்த கூட்டணி தலைவர்களின் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திப்பதற்காக நிதிஷ் குமார் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்களை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. இவர்களைத்தவிர இந்தியா கூட்டணியின் வேறு சில கட்சிகளை சேர்ந்த தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதாதள வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

டெல்லியில் நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில், நிதிஷ்குமார் மந்திரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்