மீண்டும் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார்: துணை முதல்-மந்திரியாக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பு

பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியில் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்.

Update: 2022-08-10 08:52 GMT

பாட்னா,

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்தநிலையில், பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார்.

பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

243 இடங்களை கொண்டுள்ள பீகார் சட்டசபையில் கட்சிகளின் தற்போதைய பலம் 242. அதில் கட்சிகள் நிலவரம் வருமாறு:-

ராஷ்டிரிய ஜனதாதளம் - 79

பா.ஜ.க. - 77

ஐக்கிய ஜனதாதளம் - 45

இந்திய கம்யூ. எம்.எல்.- 12

மார்க்சிஸ்ட் கம்யூ. - 2

இந்திய கம்யூ. - 2

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா- 4

காங்கிரஸ் - 19

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி - 1

சுயேச்சை - 1

Tags:    

மேலும் செய்திகள்