நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் எனும் செயற்கைக்கோளை தயாரித்து வருகின்றன.

Update: 2023-11-16 14:04 GMT

பெங்களூரு, 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சரித்திரம் படைத்தது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் சோதனையையும் இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

இந்த நிலையில் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து உருவாக்கும் நிசார் செயற்கைகோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் பூமியில் ஏற்படும் மாற்றங்களான நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு, பனிச்சிதைவு, எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில் இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து உருவாக்கி வருகின்றன.இதில் நாசா ரேடார் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தையும் இஸ்ரோ செயற்கைகோளை ஏவுதலுக்குரிய வேலையையும் செய்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்