நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவின் கோழிக்கோட்டில் செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோழிக்கோட்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-16 01:59 GMT

கோப்புப்படம் 

கோழிக்கோடு,

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை 6 பேருக்கு 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1080 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 327 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு யாருக்கும் இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் செப்டம்பர் 24-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களும் அடங்கும். இதற்கிடையில், வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்